சுமந்திரனின் தாயாருக்கு சிறீதரன் அஞ்சலி!!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் காலமாகியுள்ள நிலையில் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொழும்பு - தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று முன்தினம் (27) சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.
தாயாருக்கு அஞ்சலி
இந்நிலையில், தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரனின் வீட்டிற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சுமந்திரனின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை முன்னாள் அதிபரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
அத்துடன் சுமந்திரனின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments