Vettri

Breaking News

ரங்கன் நற்பணி மன்றத்தின் இலங்கை மக்களுக்கான சேவைகள் அளப்பரியது!!




 ரங்கன் நற்பணி மன்றத்தின் இலங்கை மக்களுக்கான சேவைகள் அளப்பரியது






(செ.துஜியந்தன்)


அறஞ் செய விரும்பு தர்மத்தை செய்வதற்கு நீ ஆசை கொள் என ஓளவையார் ஆத்திசூடியில் சொல்கிறார். இதனையே சிறுவயதில் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் மனித வாழ்க்கையில் தொடர்சியாக யாராவது அறஞ் செய்து கொண்டிருக்கின்றார்களா? என பார்த்தால் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே மக்களுக்கான சேவையை மகேசன் சேவை என நினைத்து செய்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் நல் உள்ளங்கள் சிலர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தமது சொந்த நிதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கிவருகின்றார்கள். அவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்தான் பத்மநாதன் ரங்கனாதன் என்பவர்.

யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ரங்கனாதன் யாழ்மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். அன்றை போர் சூழல் காரணமாக 1995 இல் இடம்பெயர்ந்து வவுனியாவை வசிப்பிடமாக கொண்டவர். சிறுவயதில் இருந்தே தான தருமங்கள் செய்வதிலும், கலை கலாசார சமூக சேவைகளை செய்வதிலும் ஆர்வமாக செயற்பட்டவர். ரங்கன் நற்பணி மன்றம் ஒன்றை ஸ்தாபித்து நலிவடைந்த மக்களுக்கான பணியினை முன்னின்று செய்துவந்தார். இவர் 2009 கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்று அங்கு ரங்கனாஸ் எனும் நகைமாளிகை ஒன்றை நிறுவி மேலும் மக்களுக்கான தமது சேவையினை விரிவாக்கிக்கொண்டார். வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என பல்வேறு இடங்களிலும் வறுமையில்வாடும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதிக்குள்ளாகிய மக்களுக்கு தனது சொந்த நிதியில் உதவிகளை வாரிவழங்கி அம் மக்களை வாழவைத்துள்ளார். கல்வி, பொருளாதாரம், கலை, கலாசாரம் என சகல துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கியும் வருகின்றார். குறிப்பாக வறுமை காரணமாக திருமணம் ஆகாமல் தடைப்பட்டு இருந்த பல திருமணங்களை நகை, வீடு, சீதனம் வழங்கி முன்னின்று நடத்திக்கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல பல ஆலயங்களின் கட்டுமாணப்பணிகளுக்கு பேரூதவிபுரிந்து வருகின்றார் திருகோணமலையில் பூம்புகார் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை அமைத்துக்கொடுத்துள்ளார். அவ் ஆலயத்தின் கும்பாவிஸேகம் விரைவில் நடைபெறவுள்ளது.


ரங்கன் நற்பணி மன்றம் தாயக மக்களுக்கு செயதுவரும்; பணிகள் தற்காலத்திற்கு மிக அவசியமான பணியாக இருக்கின்றது. கனடாவில் வசிக்கும் ரங்கனாதன் ஒரு தலைசிறந்த மிருதங்க கலைஞர். 2000 ஆம் ஆண்டு வவுனியா சுத்தானந்தா இந்து மன்றத்தில் மிருதங்கம் அரங்கேற்றம் செய்து பலராலும் பாராட்டுப்பெற்றவர். ஆத்துடன் யாழ் மத்திய கல்லூரியின் கிரிக்கட் வீரராகவும் இருந்து பல சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர் கடல் கடந்து சென்றாலும் தன் தாயக மக்களுக்காக தனது சொந்த நிதியில் ரங்கன் நற்பணி மன்றம் மூலம் செய்துவரும் பணிகளை பார்த்து எனைய புலம்பெயர் உறவுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கு முடிந்தளவு உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ரங்கன் நற்பணி மன்றத்தின் பணி சிறக்க நாமும் கை கொடுத்து உதவுவோம்

No comments