இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்! அனுமதி வழங்க முடியாது!!!
மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக மாற்றப்பட்டது, ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும், சலுகைகளைப் பெறுவதற்கும் அல்ல என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனுமதி வழங்க முடியாது
மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு 70 சதவீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அரச மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க தேவையான ஆதரவை வழங்கும் நோக்கில் மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வரையறுக்கப்பட்ட பிரிவினருக்கான சம்பள அதிகரிப்புக்கு அனுமதி வழங்க முடியாது என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தொடர்ந்தும் தெரிவித்தார்.
No comments