பெண்ணை கொடூரமான கொலை செய்த நபரின் செயல்!!!
வந்துரப பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நட்டாவல பகுதியில் நேற்று காலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நட்டாவல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட நபர் வீதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் பெண்ணை கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரை மாய்க்க
கொலையை செய்த சந்தேக நபர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்
எனினும் அவர் காப்பாற்றப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வந்துரம்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments