ஏறாவூர் நகரசபை முன்பள்ளி பாலர் பாடசாலை புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு!!
எம்.எஸ்.எம். றசீன்
ஏறாவூர் நகரசபையின் கீழ் இயங்கிவரும் ஏறாவூர் நகரசபை முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (07) புதன்கிழமை முன்பள்ளி பாலர் பாடசாலை மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் எம்_எச்_எம் ஹமீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான அப்துல் மஜீட், முஹம்மட் பாறூக், ஏறாவூர் நகர பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் முஹம்மட் நபீஸ், ஏறாவூர் நகரசபை அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மட் சப்றாஸ் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதிதாக வருகை தந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து கிரீடம் இட்டு மாணவர்கள் முதல் எழுத்துக்களுடன் வரவேற்கப்பட்டனர்.
மாணவச் செல்வங்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டதோடு, வருகை தந்த மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட விடயங்களையும் இந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டனர்
முன்பள்ளி பாலர் பாடசாலை கல்விக்காக இம்முறை 15 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் ஏற்கனவே 20 பிள்ளைகள் எதிர்வரும் வருடம் பாடசாலைக்கு செல்லவுள்ளனர். எதிர்காலத்தில் முன்பள்ளி பாலர் பாடசாலையின் தளபாடத் தேவைகளை பூர்த்தி செய்து மேலதிகமாக மேலும் ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனது உரையில் நகரசபை செயலாளர் அவர்கள் குறிப்பிட்டார்.
No comments