900 கோடி ரூபாய் செலவில் அபுதாபியில் முதல் இந்து கோயில் நாளை திறப்பு!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் இக்கோயில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
இது அந்நாட்டில் உள்ள கலாசார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அத்தோடு, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் கும்பாபிஷேகத்துடன் நாளை (14) திறக்கப்பட உள்ளதோடு திறப்பு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்வுள்ளார். மேலும், பொதுமக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் கோயிலை பார்வையிடலாம் என அபுதாபி பிஏபிஎஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்காக அந்த அமைப்பின் இணையதளம் மற்றும் பெஸ்டிவல் ஆப் ஹார்மனி என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் – அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் 55,000 சதுர அடி இடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments