கல்முனை நகரில் 90வது கிளையை திறக்கின்றது Alliance finance PLC !!!
பாறுக் ஷிஹான்
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான Alliance finance தனது புதிய கிளையை கல்முனை நகரில் இன்று(6) திறந்துள்ளது .இது நிறுவனத்தின் கிளை விஸ்தரிப்பின் மற்றொரு கட்டத்திற்குச் சென்றுள்ளது.குறித்த திறப்பு விழாவில் பல்துறை சார்ந்த அதிதிகள் வருகை தந்து நிறுவனத்தின் புதிய கிளையினை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.புதிதாக திறந்து வைக்கப்பட்ட Alliance finance இன் கிளையானது இல 211 / 1, மட்டக்களப்பு வீதி கல்முனை பகுதியில் அமைந்துள்ளது
Alliance finance ஆனது 1965 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு 59 ஆண்டுகளில் 89 கிளைகள் நாடு பூராகவும் இயங்கி வருவதுடன் இன்று கல்முனையில் 90 ஆவது கிளையினை ஆரம்பித்துள்ளது.அதில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு கிளைகளுடன் கல்முனை கிளையானது 4 ஆவது கிளையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் லீசிங், கடன்கள், நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள், வீட்டுக் கடன்கள், சேமிப்புக் கணக்குகள் போன்ற பல நிதி வசதிகள் இதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும்.எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் எளிதாக இந்த இடத்திற்குச் செல்ல முடியும்.
இது தவிர இக்கிளை திறந்து வைக்கப்பட்ட பின்னர் தேசிய கீதம் இயற்றலுடன் நிறுவன கீதம் இசைக்கப்பட்டு தொடர்ச்சியாக அதிதிகளின் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது.Alliance finance ஐப் பொருத்தவரையில் எங்கள் நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான நிதிச் சேவையை வழங்குவதாகும். இந்த புதிய கிளையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிதி சேவை அனுபவத்தையும், மிக இலகுவாக அணுகக் கூடிய வசதிகள் தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளுடன் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த புதிய கிளையை வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவை மத்திய நிலையமாக மேம்படுத்துவதில் எங்களின் பணிவான மகிழ்ச்சி.” என Alliance finance இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கூறினார்.
பின்னர் அதிதிகளான நிறுவனத்தின் பிராந்திய பொது முகாமையாளர் இசங்க கயான் நிறுவனத்தின் தங்க கடன் சேவை பிரிவு அதிகாரி சுரேந்திர றொட்ரிகோ அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.கே பண்டார கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் உட்பட இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்து உறுப்பினர்கள் உட்பட விசேட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments