Vettri

Breaking News

வளைகுடா வானம்பாடி அமைப்பினால் 76 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

















"அறிவுசார்ந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம் "என்ற தொனிப்பொருளில்  எமது அமைப்பால் 22/02/024 காலை 9.30 மணியளவில்  மட்/மமே/நெல்லூர் கலைமகள் வித்தியாலயத்தில்  76  மாணவ மாணவியர்களுக்கு  1,37000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதேபோன்று இன்று முதலாம் வகுப்பு புதிய மாணவர்களுக்காக வங்கி வைப்பீட்டு புத்தகமும் வழங்கி வைக்கப்பட்டது. இதற்காக முதல் வைப்பு பணத்தை எமது அமைப்பின் தலைவர் தலா 1000/= ஐ  20 மாணவர்களுக்கும் அவரது தனி அன்பளிப்பாக வைப்பில் இடுவதாக உறுதியளித்துள்ளார்.


இந்நிகழ்வில் மட்/மமே பிரதேச செயலாளர்,அமைப்பின் தலைவர்  திரு. கர்ணன் கனகரெத்தினம், இலங்கை வங்கி முகாமையாளர் (வவுணதீவு ) வட்டாரக் கல்வி அதிகாரி மற்றும் அமைப்பின் அம்பாரை மாவட்டப் பொறுப்பாளர் திரு.தா.பிரதீபன்,மட்டக்களப்பு மாவட்ட செயற்ப்பாட்டாளர் திரு. ரகுநாதன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இலவச வாகன ஒழுங்கமைப்பு புரிந்த சைவ புரவலர் திரு. ரஞ்சிதமூர்த்தி ஐயா அவர்களுக்கு அமைப்பின் சார்பில் சிரம்தாழ்த்தி நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.


No comments