Vettri

Breaking News

சாரதியின்றி 70 கிலோ மீற்றர் பயணித்த ரயில்!




 இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் கதுவா ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று சாரதியின்றி சுமார் 70 கிலோ மீற்றர் பயணித்துள்ளது.

ரயிலின் ஹேண்ட் பிரேக் போடாமல்  சாரதி இயந்திரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். 

அப்போது ரயில் தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரயில் பதான்கோட் நோக்கி சுமார் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ரயில் சாரதி மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ரயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர். 70 கி.மீ. தூரம் வரை அந்த சரக்கு ரயில் சாரதி இல்லாமல்  ஓடிய நிலையில், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சாரதி இல்லாமல் சரக்கு ரயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



No comments