Vettri

Breaking News

யுக்திய நடவடிக்கையில் மேலும் 680 பேர் கைது!





 நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய  நடவடிக்கையில் 680 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 554 பேரும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 126 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது 168 கிராம் ஹெரோயின், 93 கிராம் 926 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்,  925 கிராம் 156 மில்லிகிராம் கஞ்சா, 1,044 கஞ்சா செடிகள், 356 கிராம் மாவா, 596 போதை மாத்திரைகள் , 32 கிராம் மதன மோதகம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 554 பேர்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 13 சந்தேக நபர்கள் உள்ளடங்குவர்.

இந்நிலையில் 2 சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments