'யுக்திய' நடவடிக்கையின்போது 667 சந்தேக நபர்கள் கைது!
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் 'யுக்திய' நடவடிக்கையின் போது இன்று (05) திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களும், பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த 107 சந்தேக நபர்களும் இதன் போது கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான 559 சந்தேக நபர்களில் போதைபொருளுக்கு அடிமையான 3 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்ககையின் போது 191 கிராம் ஹெரோயின், 103 கிராம் ஐஸ் போதைபொருள் , 02 கிலோ 300 கிராம் கஞ்சா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments