Vettri

Breaking News

முறக்கொட்டான்சேனை கிராமத்தில் 2Km நீளமான வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு !!




 முறக்கொட்டான்சேனை கிராமத்தில் 2Km நீளமான மணல் வீதிகள் கிரவல் வீதிகளாக செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு.





கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்கள் எனும் கருத்திட்டத்திற்கமைய மாவட்டம் பூராகவுமுள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வரும் நிலையில், கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை கிராமத்தில்,   2Km நீளமான மணல் வீதிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிரவல் வீதிகளாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.


இன் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு. அருண் திருநாவுக்கரசு பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியினை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்திருந்தார்.


இன் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கோறளைப் பற்று தெற்கு பிரதேச கிளை இணைப்பாளர் மணிசேகர், ஏறாவூர் பற்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்த், முறக்கொட்டான்சேனை கிராம சேவகர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்    முறக்கொட்டான்சேனை கிராமிய குழுத் தலைவர் டிசானந்தன் , செயலாளர் விமலநாதன், இணைப்பாளர் ரங்கநாதன் மற்றும் கல்வி/கலை/கலாச்சார செயலாளர் ஜெயமலர் மற்றும் கட்சியின் தேவபுரம் கிராமிய குழு இணைப்பாளர் அன்ரனி சிவராசா, இளைஞர் அணி செயலாளர் ரிஷான், மகளீர் அணி செயலாளர் சிவநிதா, தொழிற்சங்க செயலாளர் கணேசமூர்த்தி உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments