Vettri

Breaking News

24 மணித்தியாலங்களில் 708 சந்தேகநபர்கள் கைது!





 நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 708 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 551பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 157 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நடவடிக்கைகளின்போது, 1,376 கிராம் ஹெரோயின், 423 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 3,815 கஞ்சா செடிகள் மற்றும் 1,194 போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments