24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 667 சந்தேக நபர்கள் கைது!!
யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் 564 பேரும், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 103 பேரும் அடங்குவர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 564 சந்தேக நபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் 07 சந்தேக நபர்கள் உள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது, 153 கிராம் 655 மில்லிகிராம் ஹெரோயின், 88 கிராம் 255 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோ 462 கிராம் கஞ்சா, 4,688 கஞ்சா செடிகள், 113 போதை மாத்திரைகள், 180 மதன மோதகம், 147 மயக்க மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments