Vettri

Breaking News

2 தொகுதிகளை கேட்டு விடாப்பிடியாக நிற்கும் கமல்ஹாசன் - என்ன சொல்கிறது தி.மு.க?




 மக்களவைத் தேர்தலில் குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டணி 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

2 தொகுதிகளை கேட்டு விடாப்பிடியாக நிற்கும் கமல்ஹாசன் - என்ன சொல்கிறது தி.மு.க? | We Want 2 Makkal Needhi Maiam To Dmk

இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய தம்பதி - ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிய முதலமைச்சர்!

டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய தம்பதி - ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிய முதலமைச்சர்!

சுமுக உடன்பாடு

மேலும், கோவை, தென் சென்னை ஆகிய தொகுதிகளை அக்கட்சி கேட்டு வருகிறது. ஆனால் ஒரு தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2 தொகுதிகளை கேட்டு விடாப்பிடியாக நிற்கும் கமல்ஹாசன் - என்ன சொல்கிறது தி.மு.க? | We Want 2 Makkal Needhi Maiam To Dmk

இரு கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மறைமுகமாகவே நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விரைவில் திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே சுமுக உடன்பாடு எட்டப்படும் என தெரிகிறது.

No comments