Vettri

Breaking News

1,300 வைத்தியர்கள் நியமனம்!!




 

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1,300 வைத்தியர்கள் அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் தற்போது பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் பயிற்சியை முடித்த 590 பேர், வைத்தியர் பற்றாக்குறை காணப்படும் அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

No comments