மோட்டார் சைக்கிளை திருடிய 13 வயதுடைய மாணவன் கைது!!
கண்டி-பொக்காவல பொலிஸ் பிரிவில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் பதிமூன்று வயதுடைய மாணவன் மோட்டார் சைக்கிளை திருடியதாக பொலிஸாரால் திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் பூஜாபிட்டிய மரத்துகொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் பிரிவெனா பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
பொக்காவல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொக்காவல திகல்ல பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொக்காவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜானக சஞ்சீவவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்த பொலிஸார் சந்தேகத்திற்குரிய மாணவனை அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த மாணவனின் வீட்டிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அது அவரது பெற்றோருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ தெரியாது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments