நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு ரூபா 124 கோடி நட்டம்!!
நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 124 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு இணங்க 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டு இந்நட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நெல் சந்தைப்படுத்தும் சபை, திறைசேரிக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 664 கோடி ரூபாவை செலுத்தவேண்டியிருந்தது. இந்தத் தொகை செலுத்தப்படவில்லையென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments