Vettri

Breaking News

TIN இலக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு !





 இலங்கையில் TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறும் நோக்குடன் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 3 இலட்சத்து 35 ஆயிரம் பேருக்கு TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் TIN இலக்கத்தை பெறுவதன் ஊடாக, வாகனத்தை கொள்வனவும் செய்தல் மற்றும் பதிவை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு வசதியேற்படும். இதேவேளை, குறித்த இலக்கத்தினை பெறும் சகலருக்கும் வரி அறவிடப்படமாட்டாது. வருடாந்தம் 12 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் தனிநபர் அல்லது நிறுவனம் வரி செலுத்துவது கட்டாயமாகும். அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்டோர் இந்த இலக்கத்தினை பெறாதிருந்தாலும் தற்போது அவர்களுக்கான அபராதம் விதிக்கப்படமாட்டாது.

எனவே, பொதுமக்கள் அது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், வரி செலுத்தாது மறைந்துள்ளவர்களை, வரி செலுத்தலுக்குள் உள்வாங்குவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments