Vettri

Breaking News

JN.1 புதிய கொவிட்பரவல்; கொரோனா சுகாதார ஆலோசனைகளை மீண்டும் பின்பற்றுங்கள்




 


 இந்தியாவில் பரவிவரும் JN.1 புதிய கொவிட் ரகம் குறித்து சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாகவும்

இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் எந்த புதிய தொற்று ஏற்பட்ட எந்த நோயாளியும் இனம்காணப் படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்த்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில்நேற்று (02) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எனினும் கடந்த கொவிட் பருவத்தில் பின்பற்றப்பட்ட முறையான சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

No comments