ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு!!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை (01) ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் அவர்கள் ஒரு டெஸ்ட் போட்டி, 03 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 03 T20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நாளை முதல் நடைபெறவுள்ளதுடன் 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு நாள் போட்டிகளை கொழும்பில் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் போட்டிகளை கண்டியில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், சில வருடங்களின் பின்னர் மூன்று T20 போட்டிகளும் தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளன.
No comments