Vettri

Breaking News

லொறியில் ஏற்றிச்செல்லப்பட்ட மரப்பலகைகள் வீழ்ந்ததில் பெண் பலி




 


அம்பகஸ்தோவை பிரதேசத்தில் லொறி ஒன்றில் ஏற்றிச்சென்ற மரப்பலகைகள் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணாவார்.

மரப்பலகைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் லொறியை மீண்டும் வீதிக்கு எடுப்பதற்காக லொறியில் உள்ள மரப்பலகைகளை அகற்ற முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பகஸ்தோவை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments