அரண்மனை போல் இருக்கும் பிரமாண்ட வீடு.. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் முழு சொத்து மதிப்பு..
ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். இன்று பிறந்தநாள் காணும் இவரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
ஹாரிஸ் மாம்ஸ் என செல்லமாக இவரை அழைத்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
அதன்படி, ஹாரிஸ் ஜெயராஜின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 150 கோடி இருக்குமாம். இதில் அவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், ஆண்டுக்கு ரூ. 20 கோடி வரை வருமாமம் வருவதாகவும் கூறப்படுகிறது.
பார்க்க அரண்மனை போல் இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 30 கோடி என்கின்றனர். இவருடைய வீட்டிலேயே ஸ்டூடியோவையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் பயன்படுத்தி வருவதில் ஹம்மர் கார் தான் மிகவும் பிடித்தமான ஒன்றாம்.
சென்னையில் உள்ள பிரபலமான வணிக வாளகத்தில் இருக்கும் மல்டி ப்ளக்ஸ் திரையரங்கங்களில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சொந்தமாக 3 திரையரங்கம் இருக்கிறது என கூறப்படுகிறது. இவை தான் ஹாரிஸ் ஜெயராஜின் மொத்த சொத்து மதிப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments