விவசாசயத்திற்கு “ட்ரோன்“ வழங்க திட்டம்!!
நெற்செய்கைக்கு, ட்ரோன் விநியோக வேலைத்திட்டம் இந்த வருடம் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நெற்செய்கை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விவசாய சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ட்ரோன் வீதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை விவசாய துறை மெரிட் கவுன்சில் ஆரம்பித்துள்ளதுடன், இதன் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளுக்கு 100 ட்ரோன்கள் வழங்கப்படவுள்ளன.
இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் 563 விவசாய சேவை நிலையங்களுக்கும் ட்ரோன்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ட்ரோன்களை பயன்படுத்தி, பூச்சி மருந்து தெளித்தல், உரம் தெளித்தல், நெல் விதைத்தல், வயல்களை அளத்தல், நோய்களை கண்டறிதல், போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments