அரச நிறுவனங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு!
அரச நிறுவனங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச நிறுவனங்களுக்கிடையே மேலெழுகின்ற பிணக்குகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதன் தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டமா அதிபரிடம் வினவி அதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments