Vettri

Breaking News

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!





 விரிவுரையாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (18) காலை முதல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசார பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் தெரிவிக்கையில், நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் 14.01.2024, 15.01.2024 ஆகிய தினங்களில் இடம்பெற்ற கூட்டங்களின் தீர்மானத்திற்கமைவாக 16 ஆம் திகதி கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (18) அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் 'பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு' எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் பல்கலைக்கழகங்களின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினையும் மேற்கொள்ளவுள்ளோம்.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் இன்றைய தினம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது. அத்துடன், பல்கலைக்கழகத்தின் முன்றலில்  காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினையும் நடாத்துவதுடன் தொடர்ந்து  விசேட பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

No comments