Vettri

Breaking News

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாக்கியதில் தந்தை பலி!!






 

காலி – வந்துரம்பை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (02) காலை குறித்த தந்தைக்கும் மகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது தந்தையை எட்டி உதைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மகளினால் தாக்கப்பட்ட 54 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது தாயும் வீட்டில் இருந்ததாகவும் அவரும் தனது மகளினால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 22 வயதுடைய குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments