உடனடியாக முகக்கவசம் அணியுமாறு ஹோமாகம மக்களுக்கு வேண்டுகோள்
கொழும்பின் ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக அதில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இது குறித்து கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டது
சூரிய ஒளி சரியாக இருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும் எனவும், அதுவரை முகக்கவசங்களை முறையாக அணிந்து செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்குறித்த இரசாயன தொழிற்சாலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இரவு தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments