அத்தியாவசிய பொருளாதார மற்றும் உட்கட்டுமான விடையங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!
மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய அத்தியாவசிய பொருளாதார மற்றும் உட்கட்டுமான விடையங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளீதரன் எற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 01/01/2024 அன்று இடம்பெற்றது.
இவ்வருடத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பிரதானமான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது..
எமது மாவட்டத்தில் மக்களின் தேவைகளை இனம் கண்டு சிறந்த சேவையினை வழங்க அதிகாரிகள் திடசந்தர்ப்பம் புகுர வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.
மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் மாவட்டத்தில் அவசியமான கிராமிய வீதிகளை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
பிரதேச செயலகங்களில் புதிய தொழில்துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை உயர்வத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும்
இவ் வருடத்துடன் மாவட்டத்தின் எல்லை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அனைவரும் முன் வர வேண்டும் எனவும், மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் புதிய நுட்பங்களை கையாண்டு விவசாயிகளுக்கு சிறந்த விளைச்சளை பெற்றுக்கொள்வதற்கு அடிமட்டத்தில் இருந்து வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments