மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!!
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்வா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவசர தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட கிளை / பிரிவின் ஊடாக நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுடன் ஊழியர்கள் விடுமுறையை எடுக்க முடியும் என்றும் குறித்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments