Vettri

Breaking News

வெளிநாட்டு பிரஜையின் பை திருட்டு!!





 இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சேர்பிய பிரஜை ஒருவரின் விமான சீட்டு மற்றும் கடவுச்சீட்டு அடங்கிய பை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரஜை நாட்டுக்கு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், கொழும்பு கோட்டைக்கு புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, புகையிரதத்தில் இருந்த நபர் ஒருவர் தமது பயணப்பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாக குறித்த சேர்பிய நாட்டு பிரஜை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பையில் விமான சீட்டு, மடிக்கணினி மற்றும் 200 யூரோக்கள் இருந்ததாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்

No comments