Vettri

Breaking News

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மனுத்தாக்கல்!!





 பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் நேற்று(18) அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அடிப்படை உரிமைகளை மீறிய நபராக தேசபந்து தென்னகோன் பெயரிடப்பட்டுள்ளமை, போராட்டக்களம் மீதான தாக்குதலில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக, அவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியானவர் அல்லவென ஐக்கிய மக்கள் சக்தியினர், தமது அடிப்படை உரிமை மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments