Vettri

Breaking News

விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை !!





சாரதிகள் விதிமுறைகளை மீறி செயற்படுவதனாலேயே அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவான விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் மின்விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் தற்போது விபத்துகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments