மாத்தறையில் வெளிநாட்டினர் இருவர் உயிரிழப்பு!!
மிதிகமவில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலி – மாத்தறை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளின் ஸ்கூட்டர் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் சுற்றுலா பயணிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிதிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments