சிறுநீரக விற்பனை மோசடி: வைத்தியர்களின் வெளிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!
சிறுநீரக விற்பனை மோசடி தொடர்பில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு வைத்தியர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவல நிராகரித்துள்ளார்.
குறித்த வைத்தியர்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிவான் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து சிலரின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்த நிலையிலேயே இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
No comments