Vettri

Breaking News

நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இலங்கை பொலிஸில் இணைந்தனர்





 கடந்த ஆண்டு முதல் பொலிஸ் கிரிக்கெட் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இலங்கை காவல்துறையில் இணைந்தனர்.

இதன்படி, குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாகவும், அஷேன் பண்டார மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் பொலிஸ் பரிசோதகர்களாகவும் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் முடிவடைந்த இலங்கை கிரிக்கெட் முதல்தர போட்டியில் கூட்டு சாம்பியன் அந்தஸ்தை பெற்ற இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணியை வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னிலையில், இலங்கை பொலிஸில் இணைந்துகொண்ட நான்கு கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கினார்.

No comments