கொங்கிரீட் தூண் தலையில் வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு!!
தொம்பகஹாவெல , மஹாராவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் தலையில் வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த எம் .ஏ வெனுர சிந்தக என்ற 10 வயது சிறுவனாவான்.
இவர் தனது தந்தையின் சொந்த ஊரான தொம்பகஹாவெல பிரதேசத்திற்கு சென்றிருந்த போது மஹாராவ பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுவன் தனது உறவினர் வீட்டில் காணப்பட்ட இரண்டு கொங்கிரீட் தூண்களுக்கு இடையே உள்ள வலையில் ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருக்கும் போது அங்கிருந்த சில சிறுவர்களையும் ஊஞ்சலில் ஏற்றியுள்ளார்.
இதன்போது கொங்கிரீட் தூண் ஒன்று உடைந்து சிறுவனின் தலையில் விழுந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments