வில்பத்து தேசிய வனத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மிருகங்களை வேட்டாடியவரை தாக்கிக் கொன்ற யானைகள்!
வில்பத்து தேசிய வனத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து புதுக்குளத்தை அண்மித்த பகுதியில் விலங்குகளை வேட்டையாடிய குழுவினர் மீது காட்டு யானைகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வில்பத்து பூங்காவின் காப்பாளர் சுரங்கா ரத்நாயக்க தெரிவித்தார்.
கற்பிட்டி, மறிச்சிகட்டி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி அதன் ஊடாக வில்பத்து தேசிய வனத்துக்குள் பூங்காவுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments