சீமெந்து விலை அதிகரிப்பு !!!
VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்து ஒரு மூடையின் விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விலை உயர்வின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மற்றொரு நிறுவனத்தில் சீமெந்து மூடையின் விலை 2,450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வுக்கு முன் சில நிறுவனங்களில் சீமெந்து மூடையின் விலை 1,980 ரூபாவாகவும், சில நிறுவனங்களில் சீமெந்து மூட்டையின் விலை, 2,300 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments