விஜய்யின் கூலிப்படையால் பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது.
இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு அளவு சர்ச்சை வந்தாலும் கூட அதை இணைய கூலிப்படைகள் என அழைக்கப்படுபவர்கள் ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள்.
இணைய கூலிப்படை
ஒவ்வொரு நடிகர்களிடமும் இணைய கூலிப்படை இருக்கிறது என சொல்லப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் IT Wing என அழைக்கப்படுகிறது.சமீபத்தில் நடிகை ரம்பா அருணாச்சலம் படப்பிடிப்பு ரஜினி தன்னிடம் விளையாட்டாக நடந்துகொண்ட விதத்தை கூறினார். ஆனால், இதை சிலர் ரஜினியின் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் சித்தரித்து இணையத்தில் வைரலாக்கினார்கள்.
ரஜினிக்கு எதிராக விஜய்யின் கூலிப்படை
இந்நிலையில், ரஜினிக்கு எதிராக இப்படி செய்தது விஜய்யின் இணைய கூலிப்படை தான் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயம் ரஜினியின் குடும்பத்தை கூட பாதித்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி விஜய்யின் இணைய கூலிப்படை இப்படி செய்ய துவங்கிய பின், ரஜினியின் இணைய கூலிப்படையும் விஜய்யை தாக்கி பேச துவங்கிவிட்டனர்.
இது இப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது கண்டிக்க வேண்டிய விஷயம் என பிரபல பத்திரிகையாளர் கூறினார்.
No comments