ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு - அறிவித்தார் டேவிட் வோர்னர்!!
அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பதுடுப்பாட்டவீரர் டேவிட்வோர்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்துஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட்போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ள டேவிட்வோர்னர் இன்று ஒருநாள் போட்டிகளில்இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நான் நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுகின்றேன் என டேவிட்வோர்னர் தெரிவித்துள்ளார். உலக கிண்ணப்போட்டிகளின் போது அதனை நான் தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளேன் இந்தியாவில் உலக கிண்ணத்தை வென்றது மிகப்பெரிய சாதனை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவேநான் இன்று அந்த முடிவை எடுத்துள்ளேன் - என்னை உலகின் வேறு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கும் அவுஸ்திரேலிய அணியை முன்னோக்கி நகர அனுமதிக்கும் தீர்மானத்தை நான் எடுத்துள்ளேன்என அவர் தெரிவித்துள்ளார். டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களுடன் 6932 ஓட்டங்களை பெற்றுள்ளார் - அவரது சராசரி 45.30 ஆக காணப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் பட்டியலில் ஆறாவதுஇடத்தில் டேவிட் வோர்னர் காணப்படுகின்றார்.
No comments