மறைந்த வை.எல்.எஸ். ஹமீதின் நினைவேந்தல் நிகழ்வினை புறக்கணிக்குமாறு கோரிக்கை!!
பாறுக் ஷிஹான்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக பொதுச் செயலாளர் மறைந்த வை.எல்.எஸ். ஹமீதின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகளின் நினைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வினை புறக்கணிக்குமாறு சமத்துவ மக்கள் முன்னணி கட்சி ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட வைத்தியருமான சட்டத்தரணி வை.எல்.எம்.யூசுப் கேட்டுள்ளார்.
நாளை (27) கல்முனை பகுதியில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வு தொடர்பில் தனது உத்தியோக பூர்வ முகநூல் வாயிலாக மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது
மர்ஹூம் YLS HAMEED அவர்களின் அரசியல் பணிக்கு திட்டமிட்டு முற்றுப்புள்ளி வைத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அன்னாரின் மறைவின் பின்னாலுள்ள மகிழ்ச்சியை ஓர் நினைவுப் பகிர்வு மூலம் கொண்டாடி மக்களிடம் அனுதாபம் தேட முனைகிறது. இதன் மூலம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களுக்கு செய்த அநீதியை அ.இ.ம.கா மறைத்து அரசியல் இலாபம் தேட முனைகிறது. மக்களே ஏமாந்து விடாதீர்கள்.
நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்திற்கு மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீதின் குடும்பம் எவரும் செல்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். வை.எல்.எஸ்ஸின் நலன் விரும்பிகள் அனைவரும் இந்த கூட்டத்தை பகிஸ்கரிக்க வேண்டும் எனவும் வினையமாக வேண்டுகிறேன்.
மர்ஹூம் வை.எல்.எஸ். அவர்கள் தனது மௌத்திற்கு முன்னர் அன்னாருக்கு அ.இ.ம.கா இழைத்த அநீதிகளால் மிகவும் மோசமான மன அழுத்தத்தினால் பாதிப்படைந்திருந்தார். இந்த மன அழுத்தம் அவரது மாரடைப்பிற்கு ஒரு பாரிய காரணியாக அமைந்திருந்தது எனலாம். அதாவது வை.எல்.எஸ் அவர்களின் மரணத்திற்கு அ.இ.ம.காங்கிரசின் அநியாயமும் அதனால் அவரின் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பும் அவரது மரணத்திற்கு ஒரு பெரும் காரணமாக அமைந்திருந்தது என பொது மருத்துவ அறிவின் பிரகாரம் கூறலாம்.
இப்போது அவற்றினை மறைத்து அரசியல் இலாபம் தேட முனைகிறது அ.இ.ம.கா.
இன்னும் பல உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும். இன்ஷா அல்லாஹ்.
Dr Yoosuff, AAL
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கத்தம் ஓத அல்லது யாசீன் ஓத விரும்பிய அ.இ.ம.கா மர்ஹூம் வை.எல்.எஸ் அவர்கள் மரணித்த 3,7,40 ஆம் நாளில் அல்லது வருட முடிவில் ஞாபகார்த்தம் என்ற பெயரில் ஓத வேண்டும். அதென்னடா 7வது மாதத்தில் ஓதுறீங்க?
மர்ஹூம் வை.எல்.எஸ் அவர்களின் திறமையை, நேர்மையை, நம்பகத்தன்மையை அவர் உயிரோடு இருக்கும் போது மதிக்கத் தெரியாதவர்கள் அவர் மரணமாகி 7 வது மாதத்தில் மதிக்க எந்தக் கேணயன் ஐடியா கொடுத்தான்?
என்னங்கடா! மௌத்தாகிய மனிதரை ஏமாற்றி அவரின் திறமையைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் கண்டீங்க. கடைசியில அவரை மௌத்தாக்கியும் போட்டீங்க. அதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் அவ்வாறு ஏமாறும் இழகிய மனமுடையவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது கொஞ்சம் ஓவறா இல்லியாடா உங்களுக்கு?
உங்களைப் பற்றிய வெளிவராத பல உண்மைகள் இன்ஷா அல்லாஹ் தேர்தல் காலங்களில் வெளிவரும். காத்திருங்கள்.
நாங்கள் நம்பி ஏமாறும் குடும்பம் அல்ல. நம்பியவர்களை உயிரை கொடுத்து காப்பாற்றும் குடும்பம். எதிர் வரும் காலங்களில் மக்கள் யாரை நம்ப வேண்டும் யாரைத் துரத்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை ஒரு நாள் நீங்கள் அறிவீர்கள். இன்ஷா அல்லாஹ்
Dr Yoosuff, AAL
என தனது உத்தியோக பூர்வ முகநூலில் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தொலைபேசி வாயிலான தொடர்பு கொண்டு சகோதரரும் சமத்துவ மக்கள் முன்னணி கட்சி ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட வைத்தியருமான சட்டத்தரணி வை.எல்.எம்.யூசுப்பிடம் கேட்ட போது குறித்த புறக்கணிப்பு விடயம் உண்மை என்பதுடன் இந்நிகழ்வினை நடத்துபவர்கள் சுயநலத்துடன் கடந்த காலங்களில் செயற்பட்டதை மனவேதனையுடன் தான் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.
இது தவிர அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் திரு.வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் 'வாழ்வும் பணியும்' நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 27.01.2024 பிற்பகல் 03.45 மணிக்கு கல்முனை தனியார் மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடாத்தவுள்ளது.
No comments