மானிப்பாயில் கைதான இரு இளைஞர்கள் கந்தக்காட்டு புனர்வாழ்வு முகாமுக்கு!
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 24 மற்றும் 25 வயது இளைஞர்களை சட்டவைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் இரு இளைஞர்களையும் முற்படுத்திய வேளை அவர்களை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
No comments