மீண்டும் அதிகரித்தது கையடக்கத் தொலைபேசிகளின் விலை !
புதிய VAT அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை இன்று முதல் 35 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக கையடக்க தொலைபேசி சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை சங்கம் (MPMSA) தெரிவித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் VAT 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சம்பத் செனரத் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் 100,000 ரூபா மதிப்பிலான செல்போன்கள் 135,000 ரூபா விலையில் விற்பனை செய்யப்படும்.
No comments