Vettri

Breaking News

கணிதம் விஞ்ஞானப் பாடங்களில் மாணவர்களின் அக்கறையின்மையால் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன!!!




 கணிதம் விஞ்ஞானப் பாடங்களில் மாணவர்களின் அக்கறையின்மையால் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன












.

அரச அதிபர் க.கனகவேஸ்வரன்


(செய்தியாளர்) 19.01.2024


மன்னாரில் மாணவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் கவனம் செலுத்தாமையால் மன்னார் மாவட்டத்திற்கான வேலை வாயப்புக்களை வெளி மாவட்டத்தவர்கள் தட்டிச் செல்லும் நிலையே காணப்படுகின்றது.. ஆகவே மன்னார் கல்விமான்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் அரசாங்க அதிபர் க.கனகவேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.


வியாழக்கிழமை (18) மன்னார் அரசாங்க அதிபர் க.கனகவேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட மாணவர்களின் கல்வி தொடர்பான விடயங்கள்  கலந்துரையாடப்பட்டது.


இதில் பல தரப்பட்ட கல்விமான்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இதன்போது  மன்னார் அரசாங்க அதிபர் க.கனகவேஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்


நான் இக்கூட்டத்தை கூட்ட வேண்டிய முக்கிய நோக்கம் மன்னார் மாவட்டத்தில் கல்வி சார்ந்த செயல்பாடுகளை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கமே.


உங்களுக்கு நன்குத் தெரியும் மன்னார் மாவட்டத்தில் எந்தத் துறையிலும் பணியாற்றுபவர்கள் வெளி மாவட்டங்களைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.


இதற்கு முக்கிய காரணம் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானம் பாடங்களில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.


மன்னாரில் வரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆனால் மன்னாரில் எவரும் விண்ணப்பிக்கப் படாத நிலைக் காணப்படுகின்றது. 


இதனால் மன்னாரில் இன்னும் இதற்காக ஐந்து வெற்றிடங்கள் காணப்படுகின்றது. கணிதம் மற்றும் விஞ்ஞானம் பாடங்களில் மூன்று எஸ் எடுத்திருப்பவர்களையும் கண்டு பிடிக்க முடியாத நிலையே மன்னாரில் காணப்படுகின்றது.


கல்வி பொது தராதர சாதாரணப் பரீட்சையில் கூட இப்பாடங்களில் கருத்து கொள்ளாது இருக்கின்றனர்.


ஆகவே இந்த நிலையை மாற்றி கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் மாணவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதிலும் மெரிட் சித்தியில் சித்தி அடைகின்றவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.


அத்துடன் இங்கு பலர் கஷ்டத்தின் நிமித்தம் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையும் காணப்படுகின்றது.


இங்கு ஒருசிலர் கல்விக்கு கரம் கொடுத்து வருவதும் தெரிகின்றது. ஆனால் சரியான ஒழுங்கிண்மையால் ஒருவருக்கே பலரின் உதவிகள் கிட்டி வருவதும் பலருக்கு கிடைக்காமல் இருப்பதும் தெரிகின்றது.

ஆகவேதான் நாம் யாவரையும் ஒருங்கமைத்து இங்கு கல்விமான்களாக இருக்கும் உங்களை அழைத்து ஒரு குழுவாக இருந்து மன்னாரில் கல்வியை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.


ஆகவே உங்களில் 15 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தும் அரசாங்க அதிபர் மன்றும் இங்கு இருக்கும் பதவி நிலை கொண்டவர்களை போஷர்களாக கொண்டு கல்வியை முன்னெடுக்க செயல்படுவோம்.


இதற்கான யாப்பை உருவாக்கி அமைப்பு ஒன்றை  உருவாக்குவோம். இதற்கான 12 மில்லியன் ரூபா நிதியும் எம்மிடம் இருக்கின்றது. இவற்றை நாம் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு ஒரு நிபந்தனையின் மூலம் செலவழிக்கலாம்.

 

மன்னாரில் வேறு அமைப்புக்களும் கல்விக்கு உதவிக்கரம் நீட்டும்போது இந்த அமைப்பின் கவனத்துக்கு கொண்டு சென்று செயல்படுத்தும்போது உதவிகள் விரிவுபடுத்தப் பட்டதாக இருக்கும்.


அன்மையில் தாதிகள் நியமனம் வழங்கப்பட்டது. இதில் 17 பேரில் இருவர் மட்டுமே தமிழர். மீகுதியானானோர் சகோதர. மோழி பேசுபவர்களாக இருந்தனர்.


இதற்கு காரணம் கணிதம் விஞ்ஞானப பாடகளில் தகுதியின்மையே. ஆகவேதான் நாம் இதில் கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

 

ஆகவே இந்த விடயத்தில் பாடசாலைகளில் நாம் கணிதம் . விஞ்ஞானம் பாடங்களை கற்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

No comments