Vettri

Breaking News

கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு!!




 கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிற்கு அருகில் இருந்தே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (20) காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றதடுப்பு பொலிஸார் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

No comments