எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!
லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் இன்று காலை முதல் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்துக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன.
இதன்படி, பெற்றோல் 92 லீற்றரொன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 366 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெற்றோல் 95 லீற்றரொன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும். அதேநேரம் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 236 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments