தமிழரசுக்கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் - கட்சியின் பொதுச்செயலாளர்
இலங்கைதமிழரசுக்கட்சியின் 17வது தேசியமாநாடு ஏற்கனவே திட்டமிட்ட தினங்களில் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் 2023 ஆம் ஆண்டு மேமாதம் 5ம் நாள் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்டதீர்மானத்தின்படி தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27, 28 ஆம் நாட்களில் என்,சி,வீதி உப்புவெளி, திருகோணமலை என்னும்முகவரியில் அமைந்துள்ள “ஜேக்கப் வீச் றிசோட்” எனும்மண்டபத்தில் நடைபெறும்.
கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா அவரக்ளின்தலைமையில்நடைபெறும். மேற்படிமாநாட்டுக்கூட்டம் மு.ப.10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுமென்பதை கட்சி அமைப்பு விதியான 10(உ) இற்கு அமைவாக இத்தால் தெரியப்படுத்துகின்றேன். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments