Vettri

Breaking News

கார்கள் வாங்கவுள்ளோருக்கு விழுந்த பேரிடியான தகவல்




 1000 சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது என்ற செய்தி பொய்யானது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ரக வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்தார்.

கார்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக 

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கார்கள் வாங்கவுள்ளோருக்கு விழுந்த பேரிடியான தகவல் | Vehicles Will Not Be Import

அண்மையில் 1000 சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments