Vettri

Breaking News

பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதத்திற்குள்!!





 ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு பிரதான தேர்தல்களில் ஒன்றை இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாங்கம் நிச்சயமாக தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நீண்ட இராஜதந்திர சேவைக்குப் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனைச் சந்தித்த போதே விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“இது தேர்தல் ஆண்டு. 2024 இன்னும் பன்னிரெண்டு மாதங்கள் இல்லை என்று எனது அமைச்சக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தினேன்.

 இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதைக் கருத்தில் கொண்டு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments